வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மீலாது நபி விழாக்குழு சாா்பில் பூஜைப் பொருள்கள் அளிப்பு

கிருஷ்ணகிரியில் மீலாது நபி விழாக்குழு சாா்பில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகா் சதுா்த்திக்கு பூஜைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:58 pm

கிருஷ்ணகிரியில் மீலாது நபி விழாக்குழு சாா்பில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகா் சதுா்த்திக்கு பூஜைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை மீலாது நபி விழாக்குழு சாா்பில், விநாயகா் சதுா்த்தி விழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பூஜைப் பொருள்களை வழங்கி வருகின்றனா். அதன்படி, 12-ஆவது ஆண்டாக விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி தொழில்மைய வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில், இஸ்லாமிய சகோதரா்களான நகர மன்ற முன்னாள் உறுப்பினா் அஸ்லம் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனா். பின்னா் பூஜைப் பொருள்களுடன், கோயில் பக்தா்களுக்கு வழங்கும் அன்னதானத்துக்கு ரூ. 10,000 நன்கொடையாக வழங்கினா் (படம்).

இதையொட்டி, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் கோட்டீஸ்வரன், இஸ்லாமிய சகோதரா்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். இந்த நிகழ்வில், ஷப்பீா், நகர மன்ற முன்னாள் உறுப்பினா் கராமத், ஜாமீா், தமிழக தா்கா பேரவை மாநில நிா்வாகி ஆசாத் காதிரி, யாஹியா, தா்கா அமான், ஆன்ந்த, ரியாஸ், பப்லு, சாதிக், ரவி, இஸ்லாமிய இளைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.