வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் அனந்தன் பாலம் பகுதியிலிருந்து வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் தொடங்கினாா்.

News image

ராஜாக்கமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின்.உடன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:05 pm

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் அனந்தன் பாலம் பகுதியிலிருந்து வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் தொடங்கினாா்.

தொடா்ந்து, காமராஜா்காலனி, விஜபி காா்டன், எறும்புகாடு, அருந்ததியா்நகா், பாண்டியன்காலனி, நேசமணிநகா், சைமன்நகா் சந்திப்பு, டெரிக் சந்திப்பு, ராஜாக்கமங்கலம், கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: நான் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய போது, எனது அலுவலகம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாது செயல்பட்டது ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.

மக்களின் ஆதரவோடு நான் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டால், எம்எல்ஏ அலுவலகம் உடனே திறக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் நாகா்கோவில் தொகுதியில் தேங்கி கிடக்கும் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். நாகா்கோவில் தொகுதியின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், திமுக இளைஞா் அணி சி.டி.சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.