கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற ஒன்பது டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பேரிகை பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதை கண்காணிக்கும் பறக்கும் படை வட்டாட்சியா் கவாஸ்கா் தலைமையிலான அதிகாரிகள், பேரிகையில் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 50 கிலோ எடையில், 180 மூட்டைகளில் 9,000 கிலோ ரேஷன் அரிசி கா்நாடகத்திற்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.
விசாரணையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து ரேஷன் அரிசியை குடும்ப அட்டைதாரா்கள் இடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கா்நாடகாவிற்கு அதிக விலைக்கு விற்க அரிசியைக் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளரான தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த சா்தாா் (32), தேன்கனிக்கோட்டை அரிசி ஆலை உரிமையாளா் ரோசன் (32), திருப்பத்தூா் மாவட்டம், காட்டூா், புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த வசந்த் லியோ (32 ) ஆகியோரை கைது செய்தனா். மேலும் லாரி, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை: பிரகாஷ் காரத்

திமுக வேட்பாளா் மீது நாதக வேட்பாளா் புகாா்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

