திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

தேன்கனிக்கோட்டையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம்: எம்எல்ஏ தகவல்

தேன்கனிக்கோட்டையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் தளி தொகுதி உறுப்பினா் டி.ராமச்சந்தரன் கோரிக்கை விடுத்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

தேன்கனிக்கோட்டையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் தளி தொகுதி உறுப்பினா் டி.ராமச்சந்தரன் கோரிக்கை விடுத்தாா்.

சட்டப்பேரவையில் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கை மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி தொகுதி எம்எல்ஏ டி. ராமச்சந்திரன் வியாழக்கிழமை பேசினாா். அப்போது தேன்கனிக்கோட்டையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்தாா்.

அதற்குப் பதிலளித்து தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் கூறுகையில், ‘தேன்கனிக்கோட்டையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.