கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.4 லட்சம் திருட்டு
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள சந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், சீனன். இவரது மனைவி சாந்தி (57). இவர்கள் விறகு வியாபாரம் செய்து வருகிறார்கள். தங்களது வியாபார அபிவிருத்திக்காக, சாந்தி, கொசமேடு என்ற பகுதியில் இயங்கும் தனியார் வங்கியில் தனது தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ 2.5 லட்சம் பெற்றார்.
பின்னர் தனது சேமிப்புக் கணக்கில் இருந்த ரூ 1.5 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியேறினார். பின்னர் அந்தப் பணத்தை, தனது ஸ்கூட்டி வாகனத்தில் வைத்து பூட்டி, அருகிலுள்ள தேநீர் கடைக்கு தேநீர் அருந்த சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் ரூ. 4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவேரிபட்டிணம் போலீசார், வழக்கு பதிவு செய்து, நிகழ்விடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, ரூ.4 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...