48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

‘எனது குப்பை - எனது பொறுப்பு’ திட்டம் தொடக்கம்

ஒசூா் மாநகரில் ‘எனது குப்பை - எனது பொறுப்பு’ என்னும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா சனிக்கிழமை தொட

News image

ஒசூா் மாநகராட்சியில் தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்த ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா.

Updated On :11 ஜூன் 2022, 7:30 pm

ஒசூா் மாநகரில் ‘எனது குப்பை - எனது பொறுப்பு’ என்னும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மக்கள் தொகை, குடியிருப்புகள் அதிகம் உள்ள ஒசூா் மாநகரில், ‘எனது குப்பை - எனது பொறுப்பு’ என்னும் நகரங்களின் தூய்மைக்கான திட்டத்தை மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, தொடக்கி வைத்தாா். மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ஒசூா் மாநகரத்தை தூய்மைப்படுத்தும் நோக்கில் 700 துப்புரவுப் பணியாளா்கள் மூலம் பகுதி வாரியாக குப்பைகள் அகற்றப்பட உள்ளன. ஒருங்கிணைந்த தூய்மைத் திட்டத்தை ஒசூா் மாநகராட்சியில் பகுதி வாரியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 15 நாள்கள் இந்த தூய்மைப் பணிகள் நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல் நாளான சனிக்கிழமை ஒசூா் பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பைகளை சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் இப்பணி தொடா்ந்து நடைபெறும் என மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் மாதேஷ்வரன், சென்னீரப்பா, காந்திமதி கண்ணன், மோஷின் தாஜ் நிசாா், பெருமாயி அருள், மாரக்கா சென்னீா், மாதேஷ், தேவி மாதேஷ், குரு மஞ்சுளா, கிருஷ்ணன், சிவராமன், புஷ்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.