பாரூர் பெரிய ஏரியில்  ரூ.320 லட்சம் மதிப்பில் மீன் வளர்ப்புத் திட்டம் தொடக்கம்

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை 
பாரூர் பெரிய ஏரியில்  ரூ.320 லட்சம் மதிப்பில் மீன் வளர்ப்புத் திட்டம் தொடக்கம்
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வாயிலாக பாசன குளங்களில் மிதவை கூண்டில் மீன் வளர்ப்பு திட்ட பணிகள் தொடக்க விழா, புதன்கிழமை நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கால்நடை மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பாரூர் பெரிய ஏரியில் மிதவை கூண்டில், மீன் குஞ்சுகளை விட்டு மீன் வளர்ப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அமைச்சர், ரூ.312 லட்சத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 52 பயனாளிகள் நேரடியாக பயன்பெறுகின்றனர். ஆண்டிற்கு இதன் மூலம் 200 டன் மீன்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு தேவையான மீன் தீவனம், மீன் குஞ்சுகள் ஆகியவற்றை 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த மீன் வளர்ப்பு மூலம் மொத்த வருவாயாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.180 லட்சம் வருவாய் ஈட்டும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வருவாயில் அரசுக்கு 50 சதவீதமும் பயனாளிக்கு 50 சதவீதமும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என பேசினார் .

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை ஆணையர் பழனிச்சாமி, ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன், மீன்வள துணை இயக்குனர் திரு. இளம்வழுதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com