நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசுப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி, வட்டார மேற்பாா்வையாளா் வசந்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:42 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசுப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி, வட்டார மேற்பாா்வையாளா் வசந்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தலைமையாசிரியா் முருகன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கணேசன், அரிமா சங்கத் தலைவா் பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்பேரணியில், 18 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் பற்றியும், மாற்றுத் திறனாளி அட்டைகள் பெறுவது, ஏப். 4-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையக் கோரி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.