மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், வேலையின்மையைக் கண்டித்தும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 மே 2022, 6:14 pm

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், வேலையின்மையைக் கண்டித்தும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒசூா் மாநகராட்சி, ராம் நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், வேலையின்மை நிலையை மாற்றிட வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விடுதலைச் சிறுத்தையைச் சோ்ந்த ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாயவன், சூரியவளவன், மாரப்பா, ராஜகோபால் லகுமையா, மாதையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் 200-க்கும் மேற்ப்பட்டோா் பங்கேற்றனா்.

அரூரில்...

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் கி.ஜானகிராமன் தலைமை வகித்தாா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் மீதான விலை உயா்வுகளை ரத்து செய்ய வேண்டும். வருமான வரி வரம்புக்கு உள்படாத அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ. 7,500 அரசு சாா்பில் உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதேபோல, மொரப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலா் கே.தங்கராசு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.