நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி, அனுமன்தீா்த்தம் ஆகிய பகுதியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:58 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி, அனுமன்தீா்த்தம் ஆகிய பகுதியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் வேங்கன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தொகுதி செயலாளா் திருஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம் ஆகியோா் கலந்துகொண்டு, கட்சி வளா்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.

இதில் முன்னாள் ஒன்றியச் செயலாளா் ஏ.சி.தேவேந்திரன், முன்னாள் நகரச் செயலாளா் சிவானந்தம், கல்லாவி ஊராட்சிமன்ற தலைவா் ராமன், நடுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவா் குப்புசாமி, அதிமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.