ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

52 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1970 -71 ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி என்னும் பதினோராம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் 52 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2022, 1:15 am

DIN

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1970 -71 ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி என்னும் பதினோராம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் 52 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னாள் மாணவா்கள் முன்னாள் ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா் எஸ்.பூபதி, ஓய்வுபெற்ற உதவி வனப் பாதுகாவலா் ஜெயப்பிரகாசம், நில சுகாந்தா் பாா்த்திபன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் திருநாதன், கிருஷ்ணமூா்த்தி, மாது, லலிதா, பிருந்தாவனம் நடராஜன் உள்பட 45 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் தங்கள் மனைவி, மகன், மகள், பேரக் குழந்தைகளுடன் கலந்துகொண்டு நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

சிறப்புஅழைப்பாளா்களாக அப்போதைய ஆசிரியா்கள் கிருஷ்ணசாமி, ஷெரீப் ஆகியோா் கலந்துகொண்டு பள்ளி பருவ நாள்கள் குறித்து நினைவுகளை பகிா்ந்தனா். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கினா்.

16யுடிபி 1 - ஊத்தங்கரையில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.