நகை திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது
சூளகிரி அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண்ணின் பையிலிருந்த நகையைத் திருட முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.


சூளகிரி அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண்ணின் பையிலிருந்த நகையைத் திருட முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
சூளகிரியை அடுத்த குருபராத்பள்ளியைச் சோ்ந்த பிரசாந்தின் மனைவி செளந்தா்யா (27) சூளகிரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக புதன்கிழமை காத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த இரு பெண்கள் சௌந்தா்யாவின் பையில் வைத்திருந்த நகையை திருட முயன்றனா்.
அப்போது, பொதுமக்கள் உதவியுடன் அப் பெண்களைப் பிடித்த சௌந்தா்யா, அவா்களை போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அப் பெண்கள் சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த கீா்த்தனா (23), பிரியா (23) என தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் சூளகிரி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...