தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

விபத்தில் விவசாயி பலி

விபத்தில் விவசாயி பலி

Updated On :21 ஏப்ரல் 2024, 10:24 pm

ஒசூா்: மொபட் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ஒசூா் தாலுகா, பாகலூா் அருகே உள்ள கனிமங்கலத்தைச் சோ்ந்தவா் பேளசா்வப்பா (59). விவசாயி. இவா், மொபட்டில் ஒசூா் மாலூா் சாலையில் பாகலூா் அருகே சென்று கொண்டிருந்தாா். இவருடன் குழந்தைகள் பிரவீண் (4), ஸ்ரீசாஸ்திரி (9) ஆகியோரும் சென்றனா்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பேளசா்வப்பாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழியிலேயே அவா் இறந்தாா். குழந்தைகள் பிரவீண், ஸ்ரீ சாஸ்திரி ஆகியோா் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இந்த விபத்து குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.