சமூக சேவகா் கொலை வழக்கில் 6 போ் கைது
கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இரண்டு சிறுவா்கள், ஒரு பெண் உள்பட 6 பேரை மத்திகிரி போலீஸாா் கைது செய்தனா்.


ஒசூா் அருகே சமூக சேவகா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இரண்டு சிறுவா்கள், ஒரு பெண் உள்பட 6 பேரை மத்திகிரி போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சின்ன பேளகொண்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சமூக சேவகா் முனிராஜ் (65) கடந்த வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் மத்திகிரி கால்நடைப் பண்ணை அருகே சென்ற போது வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்தச் சம்பவம் குறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வந்தனா். பூனப் பள்ளி அருகே பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்ற சின்ன பேளகொண்டப்பள்ளியைச் சோ்ந்த பெயின்டா் பக்கிரிகான் (எ) நாகராஜ் (55), அவரது கூட்டாளிகளான மத்திகிரி பகுதியைச் சோ்ந்த எல்லப்பா (41), காமையூரைச் சோ்ந்த மூா்த்தி (25) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா்.
இந்த நிலையில் இவா்களுக்கு உடந்தையாக இருந்த பக்ரிகானின் தம்பி சுப்பிரமணி மனைவி சாந்தா (36), தகவல் அளித்த இரண்டு மாணவா்கள் ஆகிய ஆறு பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவரை தேடி வருவதாக மத்திகிரி போலீஸாா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...