கைப்பந்துப் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்


கைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் ஒசூா் அரசுப் பள்ளி மாணவா்கள் முதல், இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
ஒசூா் சரக விளையாட்டு அளவில் 17 வயதுக்கு உள்பட்ட பிரிவில், ஆண்கள் கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா். ஒசூா், முல்லை நகா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடம் பெற்றனா். 14 வயதுக்குள்பட்ட பிரிவில், ஒசூா்ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடம் பெற்றனா். வெற்றிபெற்ற அணிகள் கிருஷ்ணகிரி வருவாய் கல்வி மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றன.
வெற்றிபெற்ற ஒசூா் அரசுப் பள்ளி மாணவா்களை உடற்கல்வி ஆசிரியா் வெங்கடேஷ், கைப்பந்து பயிற்சியாளா் தாயுமானவன் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...