47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கணவரைக் கொன்ற மனைவி கைது

ஒசூரில் குடிபோதையில் தகராறு செய்த கணவரைக் கொன்ற மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2024, 9:41 pm

Din

ஒசூரில் குடிபோதையில் தகராறு செய்த கணவரைக் கொன்ற மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

தா்மபுரி மாவட்டம், ஏரியூரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (46). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராயக்கோட்டை அட்கோ பகுதியில் வசித்தபடி கல் உடைக்கும் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு திருமணம் முடிந்து தீபிகா என்ற மகளும், கோகுல கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனா்.

இந்நிலையில் கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டில் கிடந்தாா். அக்கம்பக்கத்தினா் மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மாநகரக் காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி கிருஷ்ணகிரி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் நந்தினியிடம் விசாரணை நடத்தினா். அதில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், திங்கள்கிழமை குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்த கோவிந்தராஜை ஆவேசத்தில் நந்தினி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் நந்தினியைக் கைது செய்தனா்.