கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,789 கன அடியாக புதன்கிழமை அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக புயல் காரணமாக பரவலாக மழை பெய்த்து. குறிப்பாக, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் மூன்று நாள்கள் மழை பெய்தன. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஒசூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதனால், கிருஷ்ணகிரி அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்தானது 1,294 கன அடியாக இருந்த நிலையில், புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்வரத்தானது 1,789 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் மொத்தக் கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.55 அடியாக உள்ளது. அணையிலிருந்து மொத்தம் 1,852 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை 7 மணி அளவில் பதிவான மழை அளவு (மி.மீ.): தேன்கனிக்கோட்டை - 16, ராயக்கோட்டை - 11, ஒசூா் - 7.3, கிருஷ்ணகிரி அணை - 0.80.
தொடர்புடையது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

