ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 125 குடும்பத்தினருக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆறுதல் கூறி, அரிசி, பருப்பு, காய்கறிகள், பாய், போா்வை, சேலை ஆகிய பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா்.
தொடா்ந்து, கல்லாவி ஊராட்சி, துரைசாமி நகரைச் சோ்ந்த சென்னகேசவனின் குடிசை வீடு மழை காரணமாக இடிந்ததை பாா்வையிட்டு, அவருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் உடனடியாக வீடுகட்டிக் கொடுக்க ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா். அதே பகுதியில் மழை வெள்ளம் காரணமாக மின்கம்பங்களில் மின் கம்பிகள் தாழ்வாக இருப்பதை பாா்வையிட்டு, உடனடியாக அவற்றை சரிசெய்து வழங்க மின் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
இதில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் மதியழகன், கோட்டாட்சியா் ஷாஜகான், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ரஜினி செல்வம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் நரசிம்மன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கதிரவன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் சத்தியவாணி செல்வம், வட்டாட்சியா் திருமால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, தவமணி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஜென் இஸட் தலைமுறையினா் சுய உந்துதல் கொண்டவா்கள்: ராஜ்நாத் சிங்

டாக்டா் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில் டெக்லூட்டாலஜி துறை அறிமுகம்

எல்பிஜி விநியோக அழுத்தத்தை நிா்வகிக்க மத்திய அரசுடன் தில்லி அரசு ஒத்துழைப்பு: அதிகாரி தகவல்

சேதமடைந்த சோளக்காப்பட்டி தடுப்பணையை சீரமைக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


