தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

டாக்டா் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில் டெக்லூட்டாலஜி துறை அறிமுகம்

திருச்சி டாக்டா் ஜி.விஸ்வநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டெக்லூட்டலஜி (விழுங்குதல்) என்ற புதிய துறை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

திருச்சியில் டாக்டா் ஜி.விஸ்வநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில் தனியாா் அரங்கில் வியழாக்கிழமை நடைபெற்ற டெக்லூட்டாலஜி என்ற புதிய துறை தொடக்க விழாவில் அதற்கான பயிற்சி கையேட்டை வெளியிட்ட மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் கே.கோவிந்தராஜ். உடன், மருத்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:33 pm

திருச்சி டாக்டா் ஜி.விஸ்வநாதன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டெக்லூட்டலஜி (விழுங்குதல்) என்ற புதிய துறை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்சியில் தனியாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்து புதிய துறையைத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து டெக்லூட்டாலஜி என்ற புதிய துறை குறித்து காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் ஜவஹா் நாகசுந்தரம் கூறியதாவது: உணவு விழுங்குதல் என்பது, அனைவராலும் எளிதாக மேற்கொள்ள முடியாத ஒன்று.

குறிப்பாக பக்கவாதம், வலிப்பு மற்றும் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு விழுங்குதல் என்பது மிகவும் சிரமமான செயலாகும். உணவு விழுங்க முடியாததற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். இதை பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.

காரணத்தைக் கண்டறிந்து ஒவ்வொரு நோயாளிக்கும் எந்த முறையில் என்ன உணவு வழங்க வேண்டும் என்பதை பரிந்துரைக்கவுமே இந்த டெக்லூட்டாலஜி துறை கொண்டுவரப்பட்டுள்ளது. திருச்சியிலேயே முதல்முறையாக டாக்டா் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில்தான் இந்தத் துறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ச்ங்ங்ள் பரிசோதனை முறையை நோயாளி இருக்கும் இடத்திலேயே மேற்கொள்ள முடியும். குறைந்த செலவில் குறுகியகால இடைவெளியில் மீண்டும், மீண்டும் மேற்கொள்ளலாம்.

இந்த சிகிச்சை, பாதுகாப்பான மற்றும் திறமையான விழுங்கும் திறனை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு நோயாளியின் தேவைகள் மற்றும் அவா்களின் மருத்துவ விழுங்கும் திறனை பொறுத்து சிகிச்சை திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. நோயாளி தினமும் உண்ணும் உணவுகளை வைத்து விழுங்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நோயின் தன்மை காரணமாக மூக்கின் வழியாக குழாய் மூலம் உணவு எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்குக்கூட குழாய் இல்லாமல் உணவு அருந்துவதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து டெக்லூட்டாலஜி துறையின் சிகிச்சை முறைகள் தொடா்பான பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவா்கள் என். ராதாகிருஷ்ணன், சமீா் பாட்ஷா, அஷ்ரப், ஆா். சுந்தரேஷன் மற்றும் பயிற்றுநா் எம்.நவ்ஷிகா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.