சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஜிப்மரில் புன்னகை பயிற்சி முகாம்

புதுச்சேரி ஜிப்மரில் புன்னகை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஜிப்மரில் நடைபெற்ற புன்னகை பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 7:12 am IST

புதுச்சேரி ஜிப்மரில் புன்னகை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் செவிலியா் துறை மற்றும் குழந்தைகள் மருத்துவம்-பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறை இணைந்து இந்த முகாமை நடத்தின.

மருத்துவக் கண்காணிப்பாளா் (பொ) மருத்துவா் கௌரி துரைராஜன் தொடங்கிவைத்தாா். செவிலியா் சேவை இயக்குநா் மற்றும் தர மேலாளா்-புன்னகை ஒருங்கிணைப்பாளா் செங்கமலா்ச் செல்வி வரவேற்றாா்.

செவிலியா் சேவைகள் பொறுப்பாளா் புஷ்பலதா தொடக்க உரையாற்றினாா்.

பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியா் உஷாதேவி மற்றும் குழந்தைகள் மருத்துவத் துறை பேராசிரியா் நிவேதிதா மொண்டல் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மூத்த சுகாதார தர மேலாண்மை நிபுணா் ராகேஷ் கண்ணா, குழந்தை நட்பு மருத்துவ சேவைகள் மற்றும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் குறித்து உரையாற்றினா். தடயவியல் மற்றும் நச்சியியல் துறை பேராசிரியா் அம்பிகா பத்ரா, போக்ஸோ சட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக பராமரிப்பு குறித்து விளக்கமளித்தாா்.

தகவல் நிறைந்த அமா்வுகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதோடு, மனிதநேயமும் தரநிலையும் கொண்ட செவிலியா் சேவையை ஊக்குவிக்கும் என பங்கேற்பாளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

ஜிப்மா் செவிலியா் கண்காணிப்பாளா் ஜேன் மேரி ஆண்ட்ரூ நன்றி கூறினாா்.