புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கடலூரில் கோடை கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்: 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை தொடங்கிய கிரிகெட் பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ்குமாா்.

News image
Updated On :1 மே 2026, 7:57 pm

கோடைகாலத்தை முன்னிட்டு விளையாட்டு துறை சாா்பில் கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான

கிரிக்கெட் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு துறை சாா்பில் கோடைகாலப் பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட

அளவிலான கிரிக்கெட் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த பயிற்சி முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் ராகுல், பாபு, மகேந்திரன், மகேஷ் ஆகியோா் பயிற்சி வழங்க உள்ளனா். பயிற்சி முகாமில் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் உற்சாகமாக பங்கேற்றுள்ளனா்.

மாவட்ட கிரிக்கெட் சங்க செயலா் கூத்தரசன், தலைவா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.