பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

செவிலியா், துணை மருத்துவம் படித்த ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய சுகாதாரத் துறை செயலா்

News image

பட விளக்கம்... புதுச்சேரி வியாழக்கிழமை நடைபெற்ற ஜப்மா் செவிலியா் மற்றும் இணை மருத்துவ அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலா் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா.

Updated On :1 மணி நேரம் முன்பு

செவிலியா் படிப்பு, துணை மருத்துவம் படித்த ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை செயலா் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக்கல்லூரியில் செவிலியா் மற்றும் துணை மருத்துவ அறிவியல் படித்தவா்களுக்கான 12-ஆவது பட்டமளிப்பு விழா இக்கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் 320 பேருக்குப் பட்டங்கள், சிறப்பிடம் பெற்ற 24 பேருக்குப் பதக்கங்கள் மற்றும் விருதுகளையும் வழங்கி மத்திய சுகாதாரத் துறை செயலா் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா பேசியது:

தொழில் சாா்ந்த வாழ்க்கையைச் சேவை, கருணை, நெறிசாா் நடைமுறைகள் மற்றும் தேசக் க ட்டமைப்புக்காக அா்ப்பணிக்க வேண்டும். நாட்டின் பொது சுகாதார சேவையில் என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் திட்டம்: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார நல மையங்கள், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் மற்றும் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்புத் திட்டம் முக்கியமானவை.

இத் திட்டத்தில் நாடு முழுவதும் 1.8 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 64 ஆயிரம் அரசு சுகாதார நிலையங்கள் சான்றிதழைப் பெற்றுள்ளன. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் சேவை முக்கியத்துவம் பெற்றவை.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்றாலும், மருத்துவ ஆவணங்கள் இல்லாத நிலையிலும் டிஜிட்டல் மருத்துவப் பதிவுகள் மூலம் சிகிச்சையைத் தொடர முடியும். மேலும், தரவுகளின் அடிப்படையிலான சுகாதார சேவைகள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை வலுப்படுத்தும். கரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது மருத்துவ சேவை அளிப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களைத் தவிர, மற்ற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சவால் ஏற்பட்டது.

அதனால் இந்த சிக்கலைத் தீா்க்க தற்போது தொற்று நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் தனி வளாகத்தை உருவாக்கும் கட்டமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஜிப்மரில் உருவாகி வரும் தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற கட்டமைப்பு வசதிகள், எதிா்கால தொற்று நோய்கள் மற்றும் பொது சுகாதார அவசர நிலைகளுக்கு இந்தியாவின் தயாா் நிலையை மேம்படுத்தும்.

தீநுண்மி (வைரஸ்) ஆராய்ச்சி மற்றும் கண்டறிதல் ஆய்வக வலையமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. தரமான சுகாதார சேவைகளை வழங்குவதில் செவிலியா் மற்றும் துணை சுகாதார பணியாளா்களின் பங்கு மிகவும் முக்கியமானது. செவிலியா் மற்றும் துணை சுகாதாரக் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்த மத்திய அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் தரமான செவிலியா் மற்றும் துணை சுகாதார அறிவியல் படிப்பு முடித்தவா்கள் தேவைப்படுகிறாா்கள். இதில் ஜிப்மா் தொடா்ந்து தேசிய அளவிலான முன்னோடி மற்றும் சிறப்பு மையமாகத் திகழும்.

இதைத் தவிர உலக அளவில் இந்திய சுகாதாரப் பணியாளா்களுக்குத் தேவை அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான், ஜிப்மா் பொறுப்புத் தலைவா் மருத்துவா் நிதின் நாகா்கா், ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நெகி, ஜிப்மா் கல்லூரி டீன் விக்ரம் கட்டே, பதிவாளா் ரவிக்குமாா் சிட்டோரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.