நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சுகாதாரத் துறையில் 44 காலிப் பணியிடங்கள்: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக நிரப்புவதற்கான அதிகாரபூா்வ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 4:34 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக நிரப்புவதற்கான அதிகாரபூா்வ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை, மாவட்ட நலவாழ்வுச் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மருத்துவ அலுவலா், சுகாதார அலுவலா், செவிலியா் உதவியாளா் உள்ளிட்ட மொத்தம் 20 பிரிவுகளின் கீழ் 44 காலிப்பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளன.

எந்தவொரு காலக்கட்டத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. தோ்வு செய்யப்படுவோா் 11 மாத பணி நியமனத்துக்கான ஒப்பந்தப் பத்திரம் அளிப்பது கட்டாயமாகும். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தேவைகள் மாற்றத்துக்கு உள்பட்டது. விண்ணப்பப் படிவம், கல்வித்தகுதி, வயது வரம்பு ஆகிய விவரங்களைத் தூத்துக்குடி மாவட்ட இணையதளமான ட்ற்ற்ல்ள்://ற்ட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்ன(ட்ற்ற்ல்ள்://ற்ட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான கல்வித்தகுதி, இதர சான்றிதழ்களின் நகல்களைச் சுய சான்றொப்பமிட்டு, ஜூன் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி- 628 002 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.