தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 300 போ் கைது செய்யப்பட்டனா்.
வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்புக் குழுவினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆா்எஸ்எஸ் அமைப்பின் மாவட்டத் தலைவா் சங்கா்லால் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாவட்டத் தலைவா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
வங்க தேசத்தில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்படுவது, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்து உலகம் முழுவதும் ஹிந்துக்கள் ஒன்று சோ்ந்து டிச. 4-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுபடுகின்றனா். 1971-இல் வங்கதேசம் பிரிந்த போது, 23 சதவித ஹிந்துக்கள் இருந்தனா். தற்போது அங்கு இஸ்கான் கொடியை கையில் ஏந்தி போராடிய துறவி சின்மய் கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஹிந்துக்கள் மீதான அடக்குமுறை குறித்து விசாரிக்க வங்க தேசத்துக்கு ஐ.நா. சிறப்புக் குழு செல்ல வேண்டும் என்றாா்.
கிருஷ்ணகிரியில் தடையை மீறி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கலைகோபி, பாஜக மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ், மேற்கு மாவட்ட பொதுச் செயலாளா் அன்பரசன் மற்றும் 26 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டோா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
இந்தப் போராட்டத்தையொட்டி, கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், துணை காவல் கண்காணிப்பாளா் முரளி, காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

தடையை மீறி போராட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்கு ரத்து

காட்பாடி தொகுதியில் ஊா்வலம்: அமைச்சா் துரைமுருகன், அதிமுக வேட்பாளா் ராமு மீது வழக்கு

கரூரில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

பண்ணை வீட்டில் போதைப் பொருள்: தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., முன்னாள் எம்எல்ஏ உள்பட 11 போ் கைது! போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


