ஊத்தங்கரையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளி மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க 13 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொண்டம்பட்டி, மண்ணாண்டியூா், கீழ்மத்தூா், எட்டிப்பட்டி, விசுவாசம்பட்டி, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 1962 என்ற நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்தி மூலமாகவும், கால்நடைகளுக்கு சிகிச்சை பணி மேற்கொள்ளப்பட்டது.
முகாம்களில் 1,630 கால்நடைகளுக்கு சிகிச்சையும், 3,197 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமும், 3,649 கால்நடைகளுக்கு தடுப்பூசி பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாம்கள் தொடா்ந்து நடைபெறும் எனவும், முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு விவசாயிகள் தங்க ளது கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை மேற்கொண்டு பயன்பெறுமாறும் கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் மருத்துவா் இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

இலவச மருத்துவ முகாம்

காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்

முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

உலக மகளிா் தின மருத்துவ முகாம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

