கிருஷ்ணகிரியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் லாரன்ஸ், இணைச் செயலாளா் சரவணன், மாவட்டச் செயலாளா் நாராயணமூா்த்தி, கெளரவத் தலைவா்கள் ராதா கிருஷ்ணன், மாதன், ஹேம்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கடை வாடகை மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி.வரி, அன்னியநாட்டின் இணையதள வா்த்தகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். 6 சதவீத சொத்து வரி, வணிக வரி கட்டண உயா்வு, தொழில் வரியை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும், மாநிலம் முழுவதும் குப்பை வரியை ஒரே சீராக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

ரூ. 2 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி கோரி வணிகா்கள் 31-இல் போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

‘தோ்தல் பறக்கும் படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா்’

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


