சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பௌா்ணமி வழிபாடு

ஒசூரில் காா்த்திகை மாத பௌா்ணமி சிறப்பு மிளகாய் வத்தல் யாகத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மனை வழிபட்டனா்.

News image
பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நடைபெற்ற மிளகாய் வத்தல் யாகம்.
Updated On :16 டிசம்பர் 2024, 6:53 pm

Din

ஒசூா்: ஒசூரில் காா்த்திகை மாத பௌா்ணமி சிறப்பு மிளகாய் வத்தல் யாகத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி அம்மனை வழிபட்டனா்.

ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி அன்று ஒசூா், மோரணப்பள்ளி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு கேது ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இக் கோயிலில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. மூலவா் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா். அதையடுத்து தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.