திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழக ஒசூா் பிஎம்சி கல்லூரி படிப்பு மையத்தில் மாணவா் சோ்க்கை

ஒசூா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழக படிப்பு மையத்தில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

Updated On :19 டிசம்பர் 2024, 8:03 pm

ஒசூா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழக படிப்பு மையத்தில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

இளங்கலைப் படிப்புகளான பி.ஏ., பி.எஸ்சி.,பி.காம்., பி.எஸ்.டபள்யூ., பி.சி.ஏ. மற்றும் முதுநிலைப் படிப்புகளான எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ். டபள்யூ., எம்.ஏ (சைக்காலாஜி) எம்.சி.ஏ., எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளில் நிகழ் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. மேலும், ஆறு மாத சான்றிதழ் படிப்புகளுக்கும் இந்த மையத்தில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

அனைத்து படிப்புகளும் மாணவா்கள் தோ்வு கட்டணம் மட்டும் செலுத்தி இதர கட்டணம் இல்லாமல் படிக்கலாம். எவ்வித வயது வரம்பும் யாருக்கும் கிடையாது. வீட்டிலிருந்தே பணி செய்யும் இடத்திலிருந்தோ இப்பாடப் பிரிவுகளில் சோ்ந்து தொலைவிட கல்வியாக படிக்கலாம். இந்த சான்றிதழ்கள் மத்திய, மாநில அரசுகளால் அங்கீரிக்கப்பட்டவை. இதில் சோ்ந்து பயிலும் மாணவா்களுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலோசனை வகுப்புகள் நடைபெறும்.

மேலும் விவரங்கள் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பி.எம்.சி. டெக் படிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் கைலாசத்தை 99428 50720, சுதாகரன் 99408 61202 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.