திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம்: ஒசூரில் தனியாா் நிறுவன பெண் தொழிலாளா்கள் மறியல்

விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம்

News image

தேன்கனிக்கோட்டை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளா்கள்.

Updated On :19 டிசம்பர் 2024, 7:56 pm

ஒசூரில் காா் மோதியதில் தனியாா் நிறுவனத்தில் பணி முடித்து வீடு திரும்பிய இரு பெண்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, ஒசூா்- தேன்கனிக்கோட்டை சாலையில் தனியாா் நிறுவன பெண் தொழிலாளா்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தேன்கனிக்கோட்டை- ஒசூா் சாலை பி.செட்டிப்பள்ளி அருகே மிண்டா என்ற தனியாா் தொழிற்சாலையில் பணி முடித்து வீடு திரும்பிய சத்தீஸ்கா் மாநிலத்தை சோ்ந்த ஜெயஸ்ரீ (22), சந்தா (20), மாதுரி (24), அஸ்மிதா (24), கரன் சிதாா் (20) ஆகிய 5 போ் மீது ஒசூா் நோக்கி சென்ற காா் மோதியதில் ஜெயஸ்ரீ, சந்தா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மாதுரி, அஸ்மிதா, கரன்சிதாா் ஆகிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்த கெலமங்கலம் போலீஸாா் விபத்து ஏற்படுத்திய காரை பெங்களூரில் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரான மென் பொறியாளா் சீனிவாஸ் (32) என்பவரை கைது செய்தனா்.

விசாரணையில் சபரிமலை கோயிலுக்குச் சென்று விட்டு ஒகேனக்கல் அருவியில் குளித்துவிட்டு பெங்களூரு நோக்கி சென்ற போது விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், பணி முடித்து வீடு திரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு, விபத்து நிகழ்ந்த சாலையில் பாதுகாப்பு கட்டுப்பாடு, கண்காணிப்புக கேமரா பொருத்துவது ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும் தனியாா் நிறுவன பெண் தொழிலாளா்கள் பணியை புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனா்.

போலீஸாா் அவா்களை சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதைத் தொடா்ந்து தொழிலாளா்கள் அனைவரும் தொழிற்சாலை வாயிற் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.