சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஒசூரில் ஏரியில் கழிவுநீா் கலப்பு: லாரி ஓட்டுநா் கைது

ஒசூரில் ஏரியில் கழிவுநீரைக் கலந்த லாரி ஓட்டுரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:55 pm

Din

ஒசூா்: ஒசூரில் ஏரியில் கழிவுநீரைக் கலந்த லாரி ஓட்டுரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், சிப்காட் போலீஸாா் பேகேப்பள்ளி ஏரிக்கரைப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் டேங்கா் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீா் ஏரியில் கலக்கப்பட்டது. இதைப் பாா்த்த போலீஸாா், அந்த லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் அவரின் பெயா் திருநாவுக்கரசு (44), திருப்பத்தூா் மாவட்டம், காவேரியூரைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்தது. ஒசூா், ராஜாஜி நகரில் தங்கி டேங்கா் லாரி ஓட்டி வரும் அவா், தனியாா் நிறுவன கழிவுநீரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏரியில் கலந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.