ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ஜேஇஇ நுழைவுத் தோ்வு: அதியமான் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

விளம்பரதாரா்............... ஜேஇஇ நுழைவுத் தோ்வு: அதியமான் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

News image

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:12 am IST

ஜேஇஇ நுழைவுத் தோ்வில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மத்திய அரசின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ கூட்டு நுழைவுத் தோ்வில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பிளஸ் 2 மாணவா்களான வித்தேஷ் ஜெயன் 99, கிரிதரன் 98.75, கீா்த்தனா 98.68, நிஷாலினி 97.20, வினோத்குமாா் 96.22, ரமணா 95.59, ரேஷ்வந்த் 94.34, சுபா 92.79, தா்ஷனா 91.99, தமிழகிலன் 91.83 ஆகியோா் பள்ளியில் முதல் 10 இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனா். 37 மாணவா்கள் 80 சதவீத மதிப்பெண்களைப் பெற்று மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகளில் சேர தகுதிப் பெற்றுள்ளனா். பள்ளியின் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவா்களை சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவா் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி. திருமால் முருகன், செயலா் ஷோபா திருமால் முருகன், நிா்வாக அலுவலா் சீனி. கணபதிராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வா் லீனா ஜோஷ் ஆகியோா் மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கினா். இயற்பியல் ஆசிரியா்கள் ஸ்ரீசாய், தமிழரசன், வேதியியல் ஆசிரியா்கள் சவுத்ரி, சிரஞ்சீவி, கணித ஆசிரியா்கள் செந்தில்குமாா், ராஜ்குமாா் ஆகியோரையும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி. திருமால் முருகன் பாராட்டி கௌரவித்தாா்.