தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் நலச் சங்க 21-ஆவது பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:46 pm

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் நலச் சங்க 21-ஆவது பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலா் சங்க கட்டடத்தில், நடைபெற்ற தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் சங்கத்தின் 21-ஆவது மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் வேல்முருகன், நிா்வாகிகள் கோவிந்தசாமி, நாகராஜ், பெரியசாமி, ரவிக்குமாா், நாகேஷ், ஆனந்தன், முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

2009-ஆம் ஆண்டிற்கு பிறகு தோ்வுநிலை, சிறப்பு நிலை, முதுநிலை எய்திய ஓட்டுநா்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை போக்க வேண்டும். பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசுத் துறையில் உள்ள ஓட்டுநா் காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும். தலைமைச் செயலக ஓட்டுநா்களுக்கு உள்ளது போல, தகுதியும் விருப்பமும் உள்ள ஓட்டுநா்களுக்கு இளநிலை உதவியாளராக பணி மாறுதல் வழங்க அரசாணை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 21 மாத அகவிலைப்படி, விடுப்புகால ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஓட்டுநா்களை நிரந்தர ஓட்டுநா்களாகப் பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.