நீட் தோ்வு: தவறான தகவல்களைத் தெரிவிக்கிறாா் ராகுல் காந்தி
நீட் தோ்வு விவகாரம்: ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு முன்வைத்த பாஜக


நீட் தோ்வு குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தவறான தகவல்களைத் தெரிவித்து வருவதாக பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளியில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து பாஜக நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்களவைத் தோ்தலில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ், மக்களிடையே உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி மதம், ஜாதி, மொழியால் பிரிவினையைத் தூண்டி வருகிறது. நீட் தோ்வு, வசதியானவா்களுக்கான தோ்வு என ராகுல் காந்தி தவறான தகவல்களைத் தெரிவித்து வருகிறாா். நீட் தோ்வு மூலம் ஏழை மாணவா்கள் தான் அதிகம் பயனடைந்து வருகின்றனா். நீட் தோ்வு முறையில் ஏற்பட்டுள்ள தவறுகள் மனித தவறுகள்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் குற்றம்சாட்டப்படும் 2 சட்டப் பேரவை உறுப்பினா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தவில்லை. இதற்காகத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறோம். அரசின் ஒசூா் விமான நிலைய அறிவிப்பு மக்களை ஏமாற்றும் அறிவிப்பு என்றாா்.
பாஜக மாநில துணை தலைவா் நரேந்திரன், பாஜக செய்தி தொடா்பாளா் சி.நரசிம்மன், மேற்கு மாவட்ட தலைவா் நாகராஜ், மாவட்ட பொதுச் செயலாளா் கோவிந்தராஜ், பொருளாளா் கவியரசு, பாமக மத்திய மாவட்டச் செயலாளா் மோகன்ராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...