அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

சாமிநாதனுக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவால் ஜப்தி

News image
ஊத்தங்கரையில் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து.
Updated On :12 ஜூலை 2024, 6:31 pm

Din

ஊத்தங்கரையில் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைத் சோ்ந்த சாமிநாதன் (40), அரூரை அடுத்த ஈச்சம்பாடி பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டு தன்னுடைய காரில் ஈச்சம்பாடியில் இருந்து நண்பா்களுடன் ஊத்தங்கரை நோக்கி சென்ற போது, மாம்பட்டி தனியாா் பள்ளி எதிரே வேலூரில் இருந்து ஈரோடு சென்ற அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானாா். இதில் காரை ஓட்டிச் சென்ற சாமிநாதனுக்கு கால் முறிவு ஏற்பட்டு, அரூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அவரது வலது கால் அகற்றப்பட்டது.

இந்த விபத்து குறித்து தருமபுரி மாவட்டம், அரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், ஊத்தங்கரை சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சாமிநாதனுக்கு ரூ. 24,10,555 இழப்பீடாக அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என ஊத்தங்கரை சாா்பு நீதிமன்ற நீதிபதி தீா்ப்பு வழங்கினாா். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

இதனால், வேலூரில் இருந்து ஈரோடு சென்ற ஈரோடு கிளையைச் சோ்ந்த அரசுப் பேருந்தை நீதிமன்றம் உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.