நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமூக விரோதிகளின் நடமாட்டம்: வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் புகாா்

சமூக விரோதிகளின் நடமாட்டம்: வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் புகாா்

News image
Updated On :19 ஜூன் 2024, 9:27 pm

Din

கிருஷ்ணகிரி, ஜூன் 19: சமூக விரோதிகளின் நடமாட்டத்தால் அச்சமாக இருப்பதாக கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரிய குடியிருப்போா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்தனா்.

தமிழக முதல்வரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு புதன்கிழமை சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, இந்தப் பகுதியில் மது அருந்துவோா், கஞ்சா பயன்படுத்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் மக்கள் அச்சமடைகிறாா்கள். இந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டாலும், இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியை அதிகரிக்க வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி, பூங்காவுக்கான இடத்தை மீட்டு தர வேண்டும். ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய உயா்ந்து வளா்ந்துள்ள மரங்களின் கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட புகாா்களை பொதுமக்கள் தெரிவித்தனா். இந்தப் புகாா்கள் குறித்து, கேட்டறிந்த அவா் நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றாா்.