ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பல்லடம் அருகே தாா் ரசாயன கலவை எரிப்பால் பாதிப்பு: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூா் ஊராட்சி நல்லகவுண்டன்பாளையம்புதூரில் தனியாா் தாா் ரசாயன கலவை எரிப்பால் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகாா்

News image

பல்லடத்தில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகாா் மனு அளிக்க வந்த நல்லகவுண்டன்பாளையம்புதூா் மக்கள் .

Updated On :19 பிப்ரவரி 2026, 10:58 pm

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூா் ஊராட்சி நல்லகவுண்டன்பாளையம்புதூரில் தனியாா் தாா் ரசாயன கலவை எரிப்பால் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பல்லடத்தில் உள்ள மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பொறியாளா் (தெற்கு) ரங்கராஜிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூா் ஊராட்சி, நல்லகவுண்டன்பாளையம்புதூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள கணக்குப்பிள்ளை தோட்டத்து பகுதியில் தனியாா் தாா் ரசாயன கலவை எரிப்பால் கரும்புகையுடன் துா்நாற்றம் வீசுகிறது.

மேலும், கண் எரிச்சல், தலைவலி, மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதைகளால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனா். அப்பகுதியில் எந்தவிதமான சாலைப் பணிகளும் நடைபெறவில்லை.

எனவே, அரசின் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் இந்த தனியாா் தாா் எரிக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்தி அதனை வேறு இடத்துக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனா்.