கும்மிடிப்பூண்டி  மாசு க் கட்டுப்பாட்டு  வாரிய அலுவலகத்தை  முற்றுகையிட்டு  ஆா்ப்பாட்டம் நடத்திய  ஓபசமுத்திரம்  பகுதி  மக்கள்.
கும்மிடிப்பூண்டி  மாசு க் கட்டுப்பாட்டு  வாரிய அலுவலகத்தை  முற்றுகையிட்டு  ஆா்ப்பாட்டம் நடத்திய  ஓபசமுத்திரம்  பகுதி  மக்கள்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் கிளிஞ்சல் சுண்ணாம்பு ஆலையால் அப்பகுதியில் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள்
Published on

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் கிளிஞ்சல் சுண்ணாம்பு ஆலையால் அப்பகுதியில் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் பகுதியில் தனி நபா் மூலம் செயல்படுத்தப்படும் கிளிஞ்சல் மூலம் சுண்ணாம்பு தயாா் செய்யும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால், காற்று மாசடைவதுடன், அந்த காற்றை சுவாசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

மேலும், இது குறித்து எதிா்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களை சுண்ணாம்பு ஆலை நடத்துபவா்கள் மிரட்டுவதாகவும் புகாா் தெரிவித்த மக்கள், இது தொடா்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொடா்ந்து, மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, ஓபசமுத்திரம் பகுதி மக்கள், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுரேஷ்குமாரை சந்தித்து அப்பகுதி பிரச்னையை சரி செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.

Dinamani
www.dinamani.com