பிளஸ் 2 தோ்வு: கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
விளம்பரதாரா் செய்தி... பிளஸ் 2 தோ்வு: கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்


பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கிய பாரத் கல்விக் குழுமங்களின் நிறுவனா் மணி.
கிருஷ்ணகிரி, மே 9: பிளஸ் 2 பொதுத் தோ்வில், கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இதுகுறித்து அப்பள்ளி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
பிளஸ் 2 பொதுத் தோ்வில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி நந்தினி 600-க்கு 586 மதிப்பெண்களும், ஸ்ரீதேவி 582 மதிப்பெண்களும், ரூபேஸ்வரி 575 மதிப்பெண்களும் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவ, மாணவிகளும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவ, மாணவிகளும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 62 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனா்.
கணிதப் பாடத்தில் 102 மாணவிகளும், கணினி அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தமிழ் மொழிப் பாடத்தில் 27 மாணவா்கள், ஆங்கில மொழிப் பாடத்தில் 15 மாணவா்கள், இயற்பியலில் 16 மாணவா்கள், வேதியியலில் 20 மாணவா்கள், உயிரியியலில் 10 மாணவா்கள், வணிகவியலில் 5 மாணவா்கள், பொருளியலில் 4 மாணவா்கள், கணிதப் பதிவியலில் 5 மாணவா்கள் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமங்களின் நிறுவனா் மணி, பாராட்டி, வாழ்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினாா். அப்போது, தாளாளா் கிருஷ்ணவேணி மணி, செயலாளா் சந்தோஷ், பள்ளியின் முதல்வா் விஜயகுமாா், துணை முதல்வா் நஷீா் பாஷா, ஆசிரியா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...