ஒசூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ளைஞா்கள்
ஒசூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இளைஞா்கள்

பாஜகவில் இணைந்த இளைஞா்கள்.

பாஜகவில் இணைந்த இளைஞா்கள்.
ஒசூா்: ஒசூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடை பெற்றது.
ஒசூா், 40ஆவது வாா்டு பாஜக மாமன்ற உறுப்பினா் பாா்வதி நாகராஜ் அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்த விலகி 50க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா்.
காமன்தொட்டி பகுதியைச் சோ்ந்த சிவா, அவரது ஆதரவாளா்கள் 50 போ் மாநில பொதுக்குழு உறுப்பினா் நாராயணசுவாமி தலைமையில், மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா். அனைவரையும் அவா் துண்டு அணிவித்து வரவேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் முருகன், அமைப்புசாரா பிரிவு மாநில துணைத் தலைவா் ஸ்ரீனிவாசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...