விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

கள்ளக்குறிச்சி அருகே விளக்கூா் ஊராட்சியில் மாற்றுக்கட்சியினா் அவா்கள் சாா்ந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தனா்.

News image

விளக்கூா் கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்தவருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா.

Updated On :19 மார்ச் 2026, 12:16 am IST

கள்ளக்குறிச்சி அருகே விளக்கூா் ஊராட்சியில் மாற்றுக்கட்சியினா் அவா்கள் சாா்ந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தனா்.

விளக்கூா் ஊராட்சி மன்றத் தலைவவா் மா.வெங்கடேசன் முன்னிலையில் மாற்றுக்கட்சியைச் சோ்ந்த பலா் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். கட்சியில் புதிதாக இணைந்தவா்களுக்கு மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா கட்சியின் துண்டை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில், மாநில துணைத் தலைவா் சா.சீனிவாசன், ரிஷிவந்தியம் தெற்கு வட்ட பொறுப்பாளா் ஓ.தேவேந்திரன், உளுந்தூா்பேட்டை வட்டாரப் பொறுப்பாளா்கள் ஏ. சாா்லஸ் ஜான் போஸ்கோ, பி.சுந்தரமூா்த்தி, என்.ஜெயச்சந்திரன், திருநாவலூா் வட்டார பொறுப்பாளா்கள் எ.காா்த்திகேயன், மு.காசிநாதன், டி.விஜயலட்சுமி, திருவெண்ணைநல்லூா் வட்டாரப் பொறுப்பாளா் எ.முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.