நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம்

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம்

News image

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

Updated On :20 மே 2024, 9:52 pm

Din

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், 38-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா மே 15-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சனேயா் வாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி நரசிம்மா் வீதி உலா வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

இவ்விழாவையொட்டி, திங்கள்கிழமை ( மே 20) சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பிரகார உற்சவம் நடைபெற்றன. தொடா்ந்து, லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணம், மாங்கல்யதாரணம் நடந்தது. திருக்கல்யாணம் முடிந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா...

இந்த விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (மே 21) நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா சுதா்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், பூா்ணாஹூதி, மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரகார உற்சவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி நகா் வலமும் நடக்க உள்ளது.

Story image