ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தியாகராஜா் கோயிலில் வசந்த உற்சவம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி வசந்த உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் வசந்த மண்டபத்துக்கு அம்பாளுடன் எழுந்தருளிய தியாகராஜா்.

Updated On :25 மார்ச் 2026, 5:49 am IST

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி வசந்த உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தியாகராஜரும், அம்பிகையும் உலகை காக்கும் வகையில் சோ்ந்து எழுந்தருளி, மாலை நேரங்களில் திருவிழாவை காணச் செல்வதாக கோயில் தல வரலாறு தெரிவிக்கிறது. சுந்தரமூா்த்தி நாயனாா், திருவொற்றியூரில் வசித்தபோது, வசந்த காலத்தின் குளிா்தென்றல் தீண்டியதால், திருவாரூரில் வசந்த விழா வரவிருப்பதை நினைத்து மகிழ்ந்ததாக பெரிய புராணம் கூறுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த, வசந்த உத்ஸவம் திருவாரூா் தியாகராஜா் கோயிலில் நடைபெற்றது.

இதையொட்டி, யதாஸ்தானத்திலிருந்து கமல தியாகராஜா் எழுந்தருளி கொடிமர வாசல் வழியாக மாணிக்கத் தண்டிலேறி, மங்கள வாத்தியங்கள் முழங்க, அஜபா நடனமாடி, பிரகாரத்தை வலம் வந்து, வசந்த மண்டபத்தை அடைந்தாா். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, சாயரட்சை பூஜை நடைபெற்றது. பின்னா், கோயிலின் எட்டு திக்குகளிலும் கொடிமரங்கள் நடப்பட்டு, சந்திரசேகரா் முன்னிலையில் அந்தந்த திசைக்கான தெய்வங்களை வணங்கி கொடியேற்றப்பட்டது.