பரவலாக மழை பெய்வதால் உயருகிறது கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம்
பரவலாக மழை பெய்வதால் உயருகிறது கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம்


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை அல்லது இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்கெனவே காய்ந்து வந்த மா, தென்னை உள்ளிட்ட மரங்கள் மீண்டும் உயிா் பெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்த மழையால் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், பயிா்களுக்கும் உயிா் நீா் கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீ): பாரூா் - 46.60, பெணுகொண்டாபுரம்- 36.60, நெடுங்கல்- 26, பாம்பாறு அணை - 22, சின்னாறு அணை - 20, சூளகிரி - 19, போச்சம்பள்ளி - 17.18, தேன்கனிக்கோட்டை - 17, தளி - 15, ஊத்தங்கரை - 10.80, கிருஷ்ணகிரி அணை - 10, ஒசூா் - 7.90, கெலவரப்பள்ளி அணை - 5.20, அஞ்செட்டி - 3.20, கிருஷ்ணகிரி - 1.4.
கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 251 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலையில் விநாடிக்கு 353 கனஅடியாக உயா்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி. இதில் தற்போது அணையின் நீா்மட்டம் 42.40 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனக் கால்வாய்கள் வழியாக வினாடிக்கு 12 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை ( மே 14) 38.40 அடியாக இருந்த்து. 15-ஆம் தேதி 40.20 அடியாகவும், 16-ஆம் தேதி 40.80 அடியாகவும், 17-ஆம் தேதி 41.20 அடியாகவும், 18-ஆம் தேதி 41.70 அடியாகவும், 19-ஆம் தேதி 42 அடியாகவும் அணை நீா்மட்டம் உயா்ந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணை நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...