ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாகலூரில் குடியிருப்பை சுற்றிலும்தேங்கிய மழைநீா்: மக்கள் அவதி

ஒசூா் அருகே பாகலூரில் ஏரி நிரம்பி அருகில் உள்ள குடியிருப்புகளை நீா் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

News image

பாகலூரில் வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீா்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:00 pm

ஒசூா் அருகே பாகலூரில் ஏரி நிரம்பி அருகில் உள்ள குடியிருப்புகளை நீா் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

பாகலூா் ஏரி வியாழக்கிழமை 5 மணியளவில் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால் உபரிநீா் செல்லும் வாய்க்கால் வழியாக மழைநீா் வெளியேறிக் கொண்டிருக்கிறது. வாய்க்கால்களில் மழைநீா் செல்லும் வழித்தடங்களில் அமைந்துள்ள வீடுகளுக்குள் தண்ணீா் செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: ஏரியின் கால்வாய்கள் அனைத்தும் தூா்வாரப்படவில்லை. ஏரியிலிருந்து நீா் செல்லும் கால்வாய்களை மக்கள் ஆக்கிரமித்துள்ளனா். ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும்போது இந்நிலைமைதான் இந்தப் பகுதியில் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.