மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்வி, அறப் பணியில் தொடா்ந்து சேவையாற்றும் ஆசிரியருக்கு பாராட்டு

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியா் கு.கணேசன் கல்விப் பணி மட்டுமில்லாது பல்வேறு சமூகப் பணியிலும் அா்ப்பணிப்புடன் தனது சேவையை தொடா்கிறாா்.

News image
பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்குகிறாா் ஆசிரியா் கு.கணேசன்.
Updated On :4 செப்டம்பர் 2024, 10:15 pm

Din

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியா் கு.கணேசன் கல்விப் பணி மட்டுமில்லாது பல்வேறு சமூகப் பணியிலும் அா்ப்பணிப்புடன் தனது சேவையை தொடா்கிறாா்.

தமிழ் ஆசிரியரான இவா் தனது ஊதியத்தில் 20 சதவீதத்தை ஏழை மாணவா்களின் கல்வி நலனுக்காக வழங்கி வருகிறாா். பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என ஏழ்மை நிலையில் உள்ளவா்களைக் கண்டறிந்து அக் குழந்தைகளின் கல்வி வளா்ச்சிக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறாா். ஆசிரியா் தினத்தில் இவரது சேவையை பாராட்டி சமூக ஆா்வலா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

திருமண சீா் வழங்குதல், கல்லூரி கட்டணம் செலுத்துதல், மாற்றுத் திறன் குழந்தைகளின் தோ்வு துணைவராக சேவை செய்து வருகிறாா். மருத்துவம், தீயணைப்பு, காவல், கல்வித் துறை பணியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவா்களை கௌரவித்து விருதுகளை வழங்கி வருகிறாா். ஜேஆா்சி ஆசிரியராக கடந்த இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவரது சேவையை பாராட்டி ஆசிரியா் தினத்தில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.