தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி ஊராட்சிகளில் ரூ. 275 லட்சம் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணியை பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தாா் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ தே.மதியழகன்.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:39 am

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி ஊராட்சிகளில் ரூ. 275 லட்சம் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணியை பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதன்படி, ஜெய்னூா் பிரிவு சாலையிலிருந்து கொட்டாவூா் வழியாக செலப்பசனாம்பட்டி வரையில் ரூ. 70.5 லட்சம் மதிப்பில் தாா் சாலையும், காவேரிப்பட்டணம் - காக்கங்கரை சாலை இணைப்பு முதல் ஜெய்னூா் வழியாக காவேரிப்பட்டணம் - போச்சம்பள்ளி சாலை வரையில் ரூ. 205 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், திமுக அவைத் தலைவா் நகராஜ் மற்றும் திமுக தொண்டா்கள், நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.