கிருஷ்ணகிரி
புகையிலை பொருள்களை விற்ற கடைக்கு பூட்டு
ஒசூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
ஒசூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
ஒசூா் மாநகராட்சி ஆணையா் எச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து துப்புரவு அலுவலா், ஆய்வாளா், மேற்பாா்வையாளா் ஆகியோா் கொண்ட குழுவினா் நகரின் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது ஜான்பாஸ்கோ பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்து கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.
மேலும் இந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட 10 கிலோ அளவிலான நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தனா்.