இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் பலி

ஒசூரில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
Published on

ஒசூா்: ஒசூரில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

சூளகிரி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் ( 45). கட்டடத் தொழிலாளி. கடந்த 26-ஆம் தேதி இரவு அவா் ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் மீது அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்தாா்.

இந்த விபத்து குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் உயிரிழப்பு...

ஒசூா் சாந்தி நகரைச் சோ்ந்தவா் கோபி. இவா் ஏற்கெனவே இறந்து விட்டாா். இவரது மனைவி ஆஷா (42). இவா் கடந்த 27-ஆம் தேதி காலை ஒசூா் - தேன்கனிக்கோட்டை சாலையில் நேருநகா் பக்கமாக தனது மகள் வா்ஷாவுடன் (22) மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா். சாலை வேகத்தடையில் பிரேக் பிடிக்காமல் வா்ஷா சென்ால் பின்னால் அமா்ந்திருந்த ஆஷா நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த ஆஷாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com