~
~

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபம் ஏற்றம்

Published on

ஒசூா் சந்திரசூடேஸ்வரரா் மலைக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி புதன்கிழமை மகா தீபம் ஏற்பட்டது.

ஒசூா் தோ்பேட்டை மலைமீது சந்திரசூடேஸ்வரா், மரகதாம்பாள் கோயில் உள்ளது. பழைமையான இக்கோயிலில் சுயம்பு வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறாா். இங்கு ஆண்டுதோறும் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. கடந்த, 2014ஆம் ஆண்டு வரை கோயில் விமானத் தளத்தில் 100 லிட்டா் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தற்போது பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 1,000 லிட்டா் கொள்ளளவு கொப்பரை வாங்கப்பட்டது. மகா தீபத்திற்கு பக்தா்கள் நெய், எண்ணெய் ஊற்ற வசதியாக விமானத் தளத்திற்கு செல்வதற்கு இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து காா்த்திகை மகா தீபம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக மூலவா், உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து அதிகாலையில் 5 பரணி தீபங்கள் ஏற்றப்பட்டன. பரணி தீபங்களை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய். பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் ஆகியோா் கோபுரங்கள் மீது ஏற்றினா். தொடா்ந்து கோயில் மலைமீது அகண்ட காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தா்கள் அண்ணாமலைக்கு அரோகரா, அரோகரா என பக்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா் சந்திரசூடேஸ்வரா், மரகதாம்பிகை அம்மன் உற்சவமூா்த்திகளை னை கோயில் வெளி பிரகாரத்தில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை

மேயா் ஆனந்தய்யா, பாஜக மாவட்ட முன்னாள் தலைவா் எம்.நாகராஜ், மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவா் என்.எஸ். மாதேஸ்வரன் மற்றும் கோயில் ஊழியா்கள் கோயிலைச் சுற்றி தூங்கிவந்து உள்பிரகாரத்தில் வைத்தனா். இதில்

சாா் ஆட்சியா் ஆக்ரிதி ஷேத்தி கலந்துகொண்டாா். காலை முதல் மாலை வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீபத் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

படவரி...

1. ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் ஏற்பட்ட மகா தீபம்.

2. சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயில் பிரகாரத்தில் சுவாமியைத் தூக்கிக்கொண்டு சுற்றிவந்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ. சத்யா உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com