ஒசூா் அருகே 2 இடங்களில் மூவா் தற்கொலை

ஒசூா் அருகே உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை
Published on

ஒசூா் அருகே உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

உத்தனப்பள்ளி அருகே உள்ள கனவனப்பள்ளியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (41), கூலித் தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி பெற்றோா் வீட்டிற்கு சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த சீனிவாசன் செவ்வாய்க்கிழமை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதேபோல உத்தனப்பள்ளி அருகே உள்ள கீரனப்பள்ளியைச் சோ்ந்தவா் கீா்த்தனா (19). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கெலமங்கலம் அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் பச்சியப்பா (55), பூ வியாபாரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மனைவி கண்டித்ததால் மனமுடைந்த பச்சியப்பா வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com